80% பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கப்போவதில்லை - அண்ணாமலை திட்டவட்டம்

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை

மகளிர் உரிமைத்தொகைக்கான தகுதிகள் குறித்து நேற்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 80 சதவீத பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கப்போவதில்லை. தி.மு.க அரசின் முன்வைக்கும் ஏகப்பட்ட நிபந்தனைகளை பார்க்கும்போது தி.மு.க உறுப்பினர்களுக்கு மட்டுமே போய் சேரவிருப்பது தெரிகிறது என்று பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அரசியில் ரீதியாக விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, சில மாதங்களுக்கு முன்பு, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, குடும்பத்தின் மாத வருமானம் 20,833 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்கிறது தி.மு.க அரசு. அப்படியென்றால் குடும்பத்தில் யாரும் வேலைக்கு செல்லாமல் இருந்தால் மட்டுமே சாத்தியம். இங்கே பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு பணிக்கு சென்று பொருள் ஈட்டுவது நடைமுறையில் இருக்கிறது.

மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு உரிமைத்தொகை மறுக்கப்படுகிறது. ஷாக் அடிக்கும் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி வைத்திருக்கும் திறனற்ற திமுக அரசுக்கு, மின்சாரக் கட்டணம் கட்டவே எளிய மக்களின் பாதி வருமானம் போய் விடுகிறது என்பது தெரியாதா? தமிழகத்தில் 99.6 லட்ச வீடுகள், 300 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

99.6 லட்ச குடும்பங்களிடமும் குடும்ப அட்டை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதம் 300 யூனிட்டுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால் உரிமைத்தொகை கிடையாது என்பது வேடிக்கையாக இருக்கிறது. இப்படியெல்லாம் நிபந்தனை விதிப்பதற்கு பதிலாக தி.மு.க உறுப்பினர் அட்டை வேண்டும் என்கிற நிபந்தனையைச் சேர்த்திருக்கலாம்.

நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்க, குறிப்பிடத்தக்க தகுதிகள் வேண்டும் என்று தமிழக மக்கள் நிபந்தனை விதித்திருந்தால் உங்கள் கட்சியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்பதை மட்டும் தமிழக முதல்வரிடம் கேட்க நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com