சட்டம் ஒழுங்கில் மேற்குவங்கம் போல தமிழ்நாடும் மாற்றப்படுகிறதா : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஸ்டாலின் - அண்ணாமலை
ஸ்டாலின் - அண்ணாமலை
Published on

மிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், வேங்கை வயல் சம்பவம் நடந்து பல நாட்களாகியும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் தான் காரணமா? தமிழக முதல்வரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்திருப்பதற்கு எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆளுநர்?

திமுக அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் தான் காரணமா ?தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவதற்கு ஆளுநர் தான் காரணமா? தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் விலைவாசி உயர்விற்கு ஆளுநர் தான் காரணமா? மேலும் மேற்கு வங்கத்தை போன்று தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கும் ஒழுங்கற்ற காட்டை போல திமுக அரசு மாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து திமுக அரசு எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுகவின் பல்வேறு கோரிக்கைகளை ஆளுநர் நிறைவேற்றி உள்ளார். அப்போது தேவைப்பட்ட ஆளுநர் இப்போது ஏன் தேவைப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com