‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டி; தமிழக கல்லூரி மாணவி தேர்வு!

Miss India 2022
Miss India 2022

நாட்டில் ஒவ்வொரு வருடமும் நடத்தப் படும் ‘மிஸ் இந்தியா’ அழகி போட்டிக்கு பெரும் மவுசு உண்டு. இப்போட்டியில் வெல்பவர்கள் உலக அழகிப் போட்டிக்கு செல்ல தகுதி பெறுவார்கள் என்பதால் ‘மிஸ் இந்தியா’ போட்டிக்கு தேர்வாவது கடினமானதாகக் கருதப் படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி நிஜோதா இவ்வருட ‘மிஸ் இந்தியா’ தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

 இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் கலந்துக் கொள்பவர்களில் இருந்து மிஸ் இந்தியா அழகி போட்டி நடத்தப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மிஸ் இந்தியா போட்டி மாடலிங், ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு துறையில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும்.

மிஸ் இந்தியா போட்டியில் தேர்வானவர்கள் தான் உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகி ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். இந்திய அழகியாக தேர்வு செய்யப்படுபவர் யாரென்பது எப்பொழுதுமே ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

 அந்தவகையில் இந்த ஆண்டு இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக மாநில அளவிலான அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த நிஜோதா ‘மிஸ் தமிழ்நாடு’ ரன்னர் பட்டத்தை வென்றார்.  நாகர்கோவில் தளவாய்புரத்தைச் சேர்ந்த நிஜோதா, கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் 3-ம் வருடம் படித்து வருகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த போட்டி மூலம் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு வின்னர் மற்றும் ரன்னர் தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான அழகி போட்டியில் கலந்து கொள்வார்கள்.

-இது பற்றி மாணவி நிஜோதா கூறியதாவது:

‘மிஸ் இந்தியா’ போட்டியிலும் தேசிய அளவில் வெற்றிவாகை சூடி, தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com