#BREAKING : தமிழகத்தில் LPG கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் ஸ்ட்ரைக்..!

LPG STRIKE
LPG STRIKE
Updated on

தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனங்களில் இருந்து எரிவாயு ஏற்றாமல் எல்பிஜி லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மேலாக ரூ.50 கோடி வரை வாடகை வழங்காததைக் கண்டித்து,திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி நடத்தப்படும் இந்த போராட்டத்தால், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டு, சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மாநிலத்தில் 3500க்கு மேல் உரிமையாளர்கள் கேஸ் லாரிகளை இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் லோடு ஏற்றாமல் கேஸ் லாரிகள் ஆங்காங்கே சாலை ஓரங்களில் மற்றும் பாட்டிலிங் பாயிண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com