தமிழ்நாடு அரசின் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறைச் சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நாளை முதல் ஜூலை 8, 9 ஆகிய இரு நாட்களில் "மேலாண்மை வணிக திருவிழா 2023" என்ற தலைப்பில் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிகழ்வில் வேளாண் துறை நிபுணர்கள், வேளாண் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று ஆலோசனைகளை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வேளாண்மை வணிக திருவிழா 2023-யில் வேளாண் துறை சார்ந்த பொருட்கள், இயந்திரங்கள், சிறுதானியங்கள், இயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பல்வேறு வகை விவசாயம் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இந்த கண்காட்சியில் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் விளைபொருள்களையும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் போன்றவற்றையும் காட்சிப்படுத்துகின்றனர். மேலும் இங்கு விற்பனையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 அங்காடிகளில் 300க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கு வருபவர்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து நடைபெறும் கருத்தரங்குகளில் வேளாண் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், வேளாண் துறை நிபுணர்கள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜூலை 8 ஆம் தேதி தேதி நடைபெறும் முதல் அமர்வில் உழவர் உற்பத்தி நிறுவனங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பிலும், 3வது அமர்வில் உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிதி உதவி மற்றும் திட்டங்கள் குறித்தும், 3வது அமர்வில் அறுவடைக்குப் பின் வேளாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பாகவும், 4வது அமர்வில் ஏற்றுமதி சந்தை குறித்தும், 5வது அமர்வில் வெற்றி பெற்ற உழவர்கள் உற்பத்தி நிறுவனங்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகள் குறித்தும் விவரிக்க உள்ளன.
6வது அமர்வில் டிஜிட்டல் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.இதைத் தொடர்ந்து 2வது நாள் ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் அமர்வில் வேளாண் சம்பந்தமான வாங்குபவர் மற்றும் விற்பவர் பங்கேற்கும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.