மகளிர் உரிமை தொகை.. 4 நாட்களுக்குள் விண்ணப்பங்களை வழங்க தமிழக அரசு உத்தரவு!

மாதிரி படம்
மாதிரி படம்

கரங்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரும் 4ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், இரண்டாவது கட்டத்துக்கான விண்ணப்பங்களை வரும் ஒன்றாம் தேதி முதல் நான்கு நாட்களுக்குள் முழுமையாக விநியோகிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பெறும் பணிகள் கடந்த 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 5-ஆம் தேதி முதல் நடைபெறும் 2-ஆம் கட்ட முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு சார் பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், வரும் ஒன்றாம் தேதி முதல் நான்கு தினங்களுக்குள் விண்ணப்பங்களை முழுமையாக விநியோகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கான 60 டோக்கன்களை ஒட்டுமொத்தமாக அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகம் செய்யாமல் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியாக பிரித்து டோக்கன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். நேரத்தைப் பொருத்தவரை, காலை அல்லது மதியம் என்று பொதுவாக குறிப்பிடுவதைத் தவிர்த்து, ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் நேரம் குறிப்பிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு டோக்கன் விநியோகம் செய்யும்போது அப்பகுதியில் இறப்பு,

வீட்டில் ஆள் இல்லாதவர்கள், விண்ணப்ப படிவம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்பவர்களின் விவரங்களை அவ்வப்போது குறித்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாமிற்கு தேவையான அளவை விட கூடுதலாகவோ, குறைவாகவோ டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com