வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி.. கட்டுப்பாடுகள் விதித்த அரசு!

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்திVijay Kumar

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலைகளை வாங்கி வழிபட்டு ஆற்றில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி வரும் 17ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வடமாநிலங்களில் கூட கணபதி பப்பா மோரியா என கூறியப்படி விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடுவர். அப்படிப்பட்ட இந்த நாளில் ஆற்றில் விநாயகர் கரைப்படும். இதனால் நீர் மாசுப்படாமல் இருக்க ஆண்டுதோறும் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் தற்போது வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  • சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் ஆன சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதியளிக்கப்படும்.

  • விநாயகர் சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

  • சிலைகளை பளபளப்பாக மாற்ற மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.

  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை.

  • சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே சிலை தயாரிக்க, பந்தல் அலங்கரிக்க பயன்படுத்தலாம்.

  • சிலைகள் மீது செயற்கை சாயம் கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

  • மாவட்ட நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com