வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குட்நியூஸ்: குறைந்த கட்டணத்தில் அரசு விடுதிகள் தொடக்கம்!

தோழி திட்டம்
தோழி திட்டம்Intel

மிழ்நாடு அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தங்கி பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் பெண்கள் பல இடங்களில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இவர்களின் குறைகளைத் தீர்க்கவே தமிழக அரசு அதிரடியாக, ‘தோழி’ என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.

பெண்களின் நலனுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, வேலூர், விழுப்புரம் என மொத்தம் 11 மாவட்டங்களில் இதுபோன்ற விடுதிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

தோழி திட்டம்
தோழி திட்டம்

இந்த விடுதிகள் நகரின் முக்கியப் பகுதிகளில் 24 மணி நேர பாதுகாப்பு வசதிகள், பார்க்கிங், பயோமெட்ரிக், இலவச வைஃபை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பொழுதுபோக்கு அம்சங்கள், அயனிங் வசதி, குழந்தைகள் பாதுகாப்புக்கான இடம், சுகாதாரமான கழிவறை, உணவுக் கூடம், படிக்கும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் துவங்கப்பட்டுள்ளது. இந்த விடுதிகள் குறித்து, www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் கட்டணம் மற்றும் இருப்பிடம் போன்ற மேற்படி தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

இனி, பாதுகாப்பு, செலவு குறித்த கவலையில்லாமல் பெண்கள் குறைந்த கட்டணத்தில் இந்த விடுதிகளில் நிம்மதியாக தங்கி பணிபுரியலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com