சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்! நடந்தது என்ன?

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
Published on

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில்  சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

தலைமைச் செயலகத்திற்கு வந்த ஆளுநர் ரவியை, பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தமிழில் வணக்கம் என்று சொல்லி  ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.

அப்போது பேசிய ஆளுநர் ரவி,”தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாக  குற்றஞ்சாட்டினார். அதேபோல், ஆளுநர் உரையில் உள்ள பல அம்சங்களை தாம் ஏற்கவில்லை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார். ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். உரையை படிக்காதபோதும் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்திருந்தார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

அப்போது, தேசிய கீதம் பாடுவது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளிக்க முற்பட்டபோது, ஆளுநர் ஆர்.என்.ரவி. தனது இருக்கையில் இருந்து இறங்கி வெளிநடப்பு செய்தார். பின்னர், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,’‘சட்டப்பேரவைக்குள் விதி எண் 176(1) இன் படி தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர் உரை, தேசிய கீதம் என்ற வரிசையிலேயே மரபுப்படி அவை நடந்தது. ஆனால், மரபை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறி விட்டார். இது போல் பல மாநிலங்களில் ஆளுநர்கள் மரபை மீறுவதால் தான், சட்டப்பேரவைக்கு அழைக்கப்படுவதே இல்லை. தெலங்கானாவில் சந்திர சேகரராவ் முதலமைச்சராக இருந்த போது, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அழைத்தது இல்லை.

ஆனால், கொள்கை, சித்தாந்தம் உள்ளிட்டவற்றில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றி ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் உரை முன்பே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெற்றப் பிறகே  வாசிக்கப்படுகிறது. அதில், உண்மைக்கு புறம்பான எந்த கருத்துகளும் இல்லை. எந்த அரசையும் குறை கூறும் வகையில் தமிழ்நாடு அரசின் உரை இல்லை.

இதையும் படியுங்கள்:
அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் சிலருக்கு உடல் எடை குறைவதில்லை.. ஏன் தெரியுமா?
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆனால், ஆளுநர் முதல் சில வரிகளை வாசித்துவிட்டு அமர்ந்துவிட்டார். இதே போல் தான் கேரளாவிலும் கடைசி வரிகளை மட்டும் ஆளுநர் வாசித்தார். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி ஆளுநர்கள் தங்கள் கருத்தை கூறுவது முறையல்ல. நாட்டுப்பற்றிலும் தேசிய தியாகத்திலும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான். முதன்முறையாக சிப்பாய் கலகம் நடந்தது வேலூரில்தான்.” இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com