புதிய அரசின் அதிரடி! ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

N. MMurugantham Swarna Sithik
Tamil nadu IAS transfers
Updated on

புதிய அரசு அமைந்த பின்னர், தமிழகத்தில் அரசு துறைகளில் புத்துயிர் ஊட்டும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் விஜய்க்கு உதவியாளர்களாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு சிலர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த துறை மாற்றத்தில் N.முருகானந்தம், M.A.சித்திக் , டாக்டர் S.சுவர்ணா , கே. நந்தகுமார் உள்ளிட்ட சில ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அரசாணையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் இன்று வெளியிட்டுள்ளார். இதற்கான அரசாணை எண்: G.O.(Rt). No.1670

​1. விடுப்பில் இருந்த N. முருகானந்தம் ஐஏஎஸ், தற்போது வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் கூடுதல் பொறுப்பு வகித்த பி. அமுதா ஐஏஎஸ் அவர்களுக்கு பதிலாக, இந்தப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த எம்.ஏ. சித்திக் ஐஏஎஸ் , தற்போது தமிழக அரசின் நிதி துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்த பதவியை டி. உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் வகித்து வந்துள்ளார்.

3.ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) மாநில திட்ட இயக்குநராக இருந்த ​டாக்டர் எஸ். சுவர்ணா ஐஏஎஸ் , அவர்கள் தற்போது தமிழக அரசின் சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலைத்துறை அரசாங்க முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்த பொறுப்பை டாக்டர் கே. மணிவாசன் ஐஏஎஸ் வகித்து வந்துள்ளார்.

4.தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்த கே. நந்தகுமார் ஐஏஎஸ்,தற்போது தமிழ்நாடு அரசு மதுபான நிறுவனத்தின் (TASMAC) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்த பதவியை டி. கிறிஸ்துராஜ் ஐஏஎஸ் வகித்து வந்தார்.

ஒரு மாநிலத்தில் புதிய அரசு பதவி ஏற்கும் பொழுது பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஐபிஎஸ் அதிகாரிகளும் துறை மாறுதல் மற்றும் இடமாறுதலுக்கு உட்படுத்தப்படுவது வாடிக்கையான விஷயம் தான். தற்போது சிறிய அளவில் அந்த மாற்றம் தொடங்கப்பட்டுள்ளது , இதைத் தொடர்ந்து பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் வேறு வேறு துறைக்கோ அல்லது இடமாற்றத்திற்கோ உள்ளாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com