

6 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் உள்துறை (Home SC Department) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு ஐ.ஜி (IG) மற்றும் ஐந்து எஸ்பி (SP) அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் உட்பட மொத்தம் 6 உயர் காவல் அதிகாரிகள் உடனடியாகப் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத் தலைமைச் செயலகத்திலிருந்து மே 22, 2026 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிகாரிகளுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில மாவட்டங்களுக்குப் புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏஎஸ்பி (ASP) அந்தஸ்தில் இருந்த இரு இளம் அதிகாரிகளுக்கு எஸ்பியாகப் பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தில் குமாரி, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல, ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை எஸ்பி டோங்கரே பிரவின் உமேஷ், திருச்சி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டிருக்கிறார்.
இதுதவிர, திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சியாமளா தேவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், கோவை போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.அசோக், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஓசூர் சப்டிவிசன் ஏஸ்பி அக்சய் அனில் வக்காரே பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர்.
மேலும், நாகர்கோவில் சப்டிவிசன் ஏஎஸ்பி லலித் குமார் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த செல்வநாக ரத்தினம், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த பிரபாகர் ஆகியோர் மாற்றப்பட்டு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
முந்தைய பொறுப்பு: காவல் துறை ஐஜி (Inspector General of Police), தற்போது கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் (Compulsory Wait) இருந்தார்.
புதிய பொறுப்பு: சென்னையில் காலியாக இருந்த போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புப் பிரிவின் காவல் துறை ஐஜி (IG, Traffic and Road Safety, Chennai) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
முந்தைய பொறுப்பு: சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை எஸ்பி (SP, Vigilance and Anti-Corruption, Western Range).
புதிய பொறுப்பு: திருச்சிராப்பள்ளி (திருச்சி) மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக (SP, Tiruchirappalli District) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது திருச்சியில் எஸ்பியாக இருக்கும் எஸ். செல்வநாகரத்தினம், IPS அவர்களுக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
முந்தைய பொறுப்பு: திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP, Thirupathur District).
புதிய பொறுப்பு: சென்னைக்கு மாற்றலாகி, அங்கு காலியாக இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு-II இன் காவல் கண்காணிப்பாளராக (SP-II, Crime against Women and Children, Chennai) பொறுப்பேற்கிறார்.
முந்தைய பொறுப்பு: கோவை மாநகரப் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் (Deputy Commissioner of Police, Traffic, Coimbatore City).
புதிய பொறுப்பு: தென் தமிழகத்தின் முக்கிய மாவட்டமான தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக (SP, Tenkasi District) நியமிக்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் நீண்ட நாட்களாகக் காலியாக இருந்த எஸ்பி பணியிடம் இதன் மூலம் நிரப்பப்பட்டுள்ளது.
முந்தைய பொறுப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP, Hosur Sub-Division).
புதிய பொறுப்பு: எஸ்பியாகப் பதவி உயர்வு (Promoted to the rank of SP) வழங்கப்பட்டு, வி. சியாமளா தேவி, IPS இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காலியான திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக (SP, Thirupathur District) நியமிக்கப்பட்டுள்ளார்.
முந்தைய பொறுப்பு: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP, Nagercoil Sub-Division).
புதிய பொறுப்பு: எஸ்பியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, டாக்டர் கே. பிரபாகர், IPS அவர்களுக்குப் பதிலாக பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக (SP, Perambalur District) புதிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.