தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!
Published on

மிழக கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்ற மாதம் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இயற்கை வளங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி ஐஏஎஸ், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் எல்.நிர்மல்ராஜ் ஐஏஎஸ் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அந்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.

இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வெளியிட்டிருக்கும்  செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 26ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 03.07.2023 அன்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இயற்கை வளங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் எல்.நிர்மல்ராஜ் ஐஏஎஸ் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு குழு அமைத்து ஆராய்ந்து தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஏக மனதாக முடிவெடுத்து 04.07.2023 செவ்வாய்க்கிழமை முதல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல் குவாரி மற்றும் கிரஷர்களும் இயங்கும் என்று அறிவித்து உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com