இனிதான் இருக்கு ஆட்டமே! பதட்டத்தை ஏற்படுத்தும் வெதர்மேன் அப்டேட்!

இனிதான் இருக்கு ஆட்டமே! பதட்டத்தை ஏற்படுத்தும் வெதர்மேன் அப்டேட்!

தற்போது தமிழகத்தின் பெரும்பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், 9ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் ஒரு அதிர்ச்சி தகவலையும் அப்டேட் செய்துள்ளார்.

அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலும் இரவு முதல் காலை வரை சிறிய அளவிலான மழை தொடரும் எனவும். இது வெறும் டிரெய்லர் மட்டுமே என்று கூறியுள்ளார்.

இதன் உண்மையான விஸ்வரூபத்தை நவம்பர் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை பார்க்கப்போகிறோம் என்றும், அதுவும் தமிழ்நாட்டில் சென்னை ஹாட்ஸ்பாட் பகுதியாக மாறும் எனவும், நவம்பர் 1-4ம் தேதிகளில் இருந்ததைவிட பெரிய தாக்கமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com