டிரெண்டிங் ஆகும் பெரியாரின் பிறந்தநாள்!

டிரெண்டிங் ஆகும் பெரியாரின் பிறந்தநாள்!

தந்தை பெரியாரின் பிறந்தநாள் தமிழகத்தில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்நிலையில் பெரியார் தொடர்பான இந்த விஷய்ம் டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில்  முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும்தான் பெரியாரின் இலக்குகளாக இருந்திருக்கின்றன என்றும் இன்று இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்துகள் விதைக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த பெரியாரை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளானது சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகளும் வரவேற்பு அளித்தன. தற்போது சமூக வலைத்தளங்களில் பெரியாரின் வாசகங்கள் பகிரப்பட்டு வருகின்றன.  ட்விட்டரில் #socialjusticeday #periyar #பெரியார் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com