இலவச மின்சாரம்
இலவச மின்சாரம்

100 யூனிட் இலவச மின்சாரம் வேணுமா? உடனே இதைச் செய்யுங்க!

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், உடனடியாக தங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதற்காக வருடத்துக்கு  3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை  மின்சாரவாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்குகின்றது.

அதில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில், மின்கட்டணதாரர்களின் மின் இணைப்பு எண்ணை அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இந்நிலையில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி தற்போது மின் கணக்கு என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான https://www.tnebltd.gov.in/adharupload/ என்ற லிங்கை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இது தற்காலிக சோதனை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே எண் மூலம் அதிக மின் இணைப்புகளை கொண்டவர்களை கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com