எங்களுக்கும் 1000 ரூபாய் - ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை!

எங்களுக்கும் 1000 ரூபாய் - ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை!

மிழக அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களுக்கென்று  தனியாக ஒரு சங்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அதன் 58வது ஆண்டு விழாவை சமீபத்தில் சிறப்பாக கொண்டாடினார்கள். அவ்விழாவில் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கலுக்கு வழங்கும் பரிசு பணம் 500 லிருந்து 1000/- ரூபாயாக உயர்த்தி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்க 58 வது ஆண்டு விழா பேரவை நடைபெற்றது. இதில் மாநில தலைவர் மாணிக்கம், மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமாரவேலு , மாநில பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட சங்க ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 தமிழகத்தில் உள்ள அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

 இதேபோன்று ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பொங்கல் பரிசு அளிக்கப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது.

ஆனால் ஓய்வூதியதாரர்கள் பாரபட்சமின்றி அனைவருக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை ஓய்வூதியர்களுக்கு உடனே வழங்க வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பாகுபாடும் இல்லாமல் பொங்கல் பரிசு ரூ.500 க்கு பதிலாக ரூ ஆயிரம் வழங்க வேண்டும், 50 ஆயிரமாக உள்ள பாதுகாப்பு நிதியை உயர்த்தி ரூ 2, இலட்சத்து ஐம்பதாயிரமாக வழங்கிட வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடுகளை நீக்கி ஓய்வூதியர்கள் நன்மை பெறும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com