தீபத்திருவிழாவை முன்னிட்டு 14 சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், உலகப் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது.

நிறைவு நாளான வரும் டிசம்பர் 6ம் தேதி அதிகாலை திருக்கோயிலின் கருவறையின் முன்பு சரியாக 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது.

தீபத்திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 9 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயிவே அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com