22 பேருக்கு 'டெங்கு' காய்ச்சல்! தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு!

டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்

தாம்பரம் மாநக ராட்சியில் 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் மட்டும் 22 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்றும் 180 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சி மொத்தம் 70 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில், சுகாதார பணிகளை மேற்கொள்ள, சுகாதார ஆய்வாளர்களுக்கு, வார்டுகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

அவர்கள், அந்தந்த வார்டுகளில் தினசரி குப்பையை அகற்றுதல், கொசு மருந்து அடித்தல், கால்வாய்களை சீரமைத்தல் போன்ற சுகாதார பணிகளை கவனிக்க வேண்டும்.

ஆனால், பல வார்டுகளில், சுகாதார பணிகள் தோவாகவே நடத்தப்பட்டு வருகின்றன. எங்கு பார்த்தாலும் குப்பை, கழிவுகள் தேங்கியுள்ளன. குறிப்பாக, கொசு மருந்து அடிக்காததால், மாநகராட்சி முழுதும் கொசு தொல்லை பல மடங்கு அதிகரித்து விட்டது.

இதனால், பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், நவம்பர் தொடங்கி ஒன்பது நாட்டுகளில் மட்டும், 22 பேருக்கு 'டெங்கு' காய்ச்சல் பரவியுள்ளது தெரியவந்து உள்ளது.

அதேபோல், 180 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாநகராட்சி முழுதும் காய்ச்சலை கட்டுப்படுத்த, கூடுதலாக, 350 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், ஒவ்வொரு வார்டிலும், டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் பணியிலும், காய்ச்சல் பரவலை தடுக்கும் பணியிலும் ஈடுபடுவர் என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com