சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 27 புதிய அறிவிப்புகள் !

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு  27 புதிய அறிவிப்புகள் !

இன்று வெளியிடப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா மார்ச் 27 இன்று தாக்கல் செய்தார். இதில் கல்வித் துறைக்கு மட்டும் 27 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்:

அனைத்து சென்னை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள் ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும்.

முதல் பாட வேலையின் போது 10 நிமிடம் தினமும் மகிழ்ச்சியான வகுப்புகள் (Happy Class) நடத்தப்படும்.

உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.35 லட்சம் செலவில் 70 Public Address System அமைத்து தரப்படும்.

மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் (Counsellors) ஒரு கல்வியாண்டிற்கு ரூ.30 லட்சம் செலவில் பணியமர்த்தப்படுவார்கள்.

பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் இணையதள வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகள், தேவைப்படும் பள்ளிகளில் அமைக்கப்படும்.

10 மற்றும் 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை 2023-2024-ஆம் கல்வியாண்டில் ரூ.3,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதிகபட்சம் 400 ஆசிரியர்களுக்கு ரூ.12 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில், கல்விச் சுற்றுலாவாக நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐடி-மெட்ராஸ், ஐஐஎம்-பெங்களூர், டெல்லி பல்கலைக்கழகம்) அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2023-2024-ம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, தலா ரூ.10,000/- வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இத்திட்டம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக தனியே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்.

ஒரு வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்படும். இம்மருத்துவ முகாமில் அனைத்து மாணவர்களும் ஆண்டுக்கு ஒரு முறை பயனடையுமாறு செயல்படுத்தப்படும்,

தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அதன் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசு கல்வி நிறுவனங்களில் மட்டும் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் (Tuition Fee) மட்டும் சென்னை மாநகராட்சியால் 2023-2024ம் நிதியாண்டு முதல் வழங்கப்படும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com