கோவையில் புதிதாக 3 காவல் நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

 கோயம்புத்தூரில் புதிதாக மூன்று காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த 23-ம் தேதி அதிகாலையில் கோவை உக்கடம் பகுதியில் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் சிலிண்டர்  வெடிப்பு சம்பவம்   நடந்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின்போது காரிலிருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

இந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல இடங்களில் தீவிர சோதனை நடத்தப் பட்டு வருகிறது. உக்கடம் வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கார் வெடித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோவையில் கரும்புக்கடை பகுதியானது உக்கடம் காவல் நிலைய எல்லைக்குள் இருந்து வருகிறது. சுந்தராபுரம் பகுதியானது குனியமுத்தூர் காவல் நிலையம் எல்லைக்குள் உள்ளது. கவுண்டம்பாளையம் பகுதியானது சாய்பாபாகாலனி மற்றும் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது.

தற்போது இந்த மூன்று பகுதிகளிலும் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதால் போலீசாரின் பணிச்சுமை குறைவதோடு, போலீசார் உடனடியாக குற்றச் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com