9 வழக்கறிஞர்களுக்கு இடைக்காலத் தடை!

நீதிமன்றம்
நீதிமன்றம்

தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள 9 வழக்கறிஞர்கள், விசாரணை முடியும் வரை தொழில்புரிய பார் கவுன்சில் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் வி.நந்தகோபாலன், தனது கட்சிக்காரர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதேபோல திருச்சி அரியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.பிரபு மீது லால்குடி மகளிர் போலீஸார், குழந்தை கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் வழக்கறிஞர் ஆர்.ராஜா மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் பலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.பெருமாள், சென்னை கிழக்கு அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.பொன் பாண்டியன், மயிலாடுதுறை வழக்கறிஞர் முத்தாட்சி ஆகியோர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னை வழக்கறிஞர் ரோஜா ராம்குமார், மதுரை வழக்கறிஞர் டி.அருண் பாண்டியன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப் பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இவர்கள் 9 பேரும் தங்கள் மீதான விசாரணை முடியும் வரை வழக்கறிஞராக தொழில்புரிய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com