பொற்பனைக்கோட்டை அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு!

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் புதிய  கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் வட்ட வடிவிலான சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் சங்ககாலத்தைச் சேர்ந்த வட்ட வடிவிலானக் கோட்டை மற்றும் கோட்டை கொத்தளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொற்பனைக்கோட்டை மையத்தில் கடந்த மே மாதம் முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

அகழாய்வு பணியில் தமிழ்நாடு தொல்லியல் துறையினர் மற்றும் தமிழ் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டுமானம் வட்ட வடிவிலான கோட்டை போல் காட்சியளிப்பது தெரியவந்துள்ளது. மேலும் செங்கல் கட்டுமானமும் காணப்படுகிறது. ஆனால் பெரும்பான்மையான கட்டுமானங்கள் ஒழுங்கற்ற நிலையில் இருப்பதும், ஒரே ஒரு கட்டுமானம் மட்டும் சரியான கட்டுமான முறையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் தள 15 அடி நீள அகலத்தில் 13 இடங்களில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் கோட்டையின் உள்புறமும், வெளிப்புறமும் அகழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தங்க மூக்குத்தி, பலவிதமான பானை ஓடுகள் மற்றும் கண்ணாடி வளையல்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அகழாய்வு பணியில் தொடர்ந்து கிடைத்துவரும் ஆதாரங்கள் வரலாற்றின் முக்கிய சான்றாக இருக்கும் என்று கூறி உள்ளனர் தொல்லியல் துறையினர்.

இந்த நிலையில் ஒன்றை அடி ஆழத்தில் வட்ட வடிவிலான சுவர் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுமானம் எதற்காக கட்டப்பட்டது என்று குறித்து தொல்லியல் துறையினர் தொடர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் நாகரிக வளர்ச்சியில் முன்னேறிய மக்களாக இருக்க கூடும் என்பதை தற்போதைய கண்டுபிடிப்புகள் கூறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com