எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து!

எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து!

இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் பிரபல வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. அங்கு சினிமா தியேட்டர்கள், கடைகள், உணவகங்கள் என பல வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உணவு விடுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க, மயிலாப்பூர் தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து மயிலாப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் எதும் இதுவரை தெரிய வரவில்லை . இந்த தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் வரவில்லை. எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் பொருட்சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னமும் வெளி வரவில்லை. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com