இலவச மின்சாரம்
இலவச மின்சாரம்

ஆதார் இணைப்பதால் இலவச மின்சாரம் பாதிக்காது!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!

"மின் இணைப்பு எண்ணுடன், 'ஆதார்' இணைப்பதால், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது, இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்,” என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில், ஆயிரம் 50 விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் செயல்பாடு குறித்து, சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று, அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் அறிவிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். இதற்காக மின்பிரிவு அலுவலகங்களில் ஆய்வு கூட்டங்களை நடத்தி கண்காணிக்குமாறு அதிகாரிகளுக் கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன மழையை எதிர் கொள்ள, மின் வாரியம் அனைத்து வகையிலும் தயார் நிலையில் உள்ளது. மழையால் பட்ட பாதிக்கப் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 36 மணி நேரத்திற்குள் சேதமடைந்த மின் சாதனங்கள் சீரமைக்கப்பட்டு, மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு, 46 புதிய டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மின் இணைப்பு எண்ணுடன், 'ஆதார்' இணைக்கும் பணி துவங்கியுள்ளது. இதுதொடர்பாக மின் நுகர்வோர்களின் பதிவு செய்த மொபைல் போன் எண்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். மூன்று இணைப்பு ஒருவர்ஐந்து இணைப்பு, வைத்திருந்து, ஆதார் எண் இணைக்கப்பட்டால், ஒரு இணைப்பிற்கு தான், 100 யூனிட் கிடைக்கும் என்று கூறுவது தவறனாது.

அனைவருக்கும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மின்வாரியத்திடம் மின்நுகர்வோரின் விபரங்கள் இல்லை. மின்வாரியத்தின் இழப்பை சரி செய்ய வேண்டும்.

இதற்கு விபரங்கள் தேவைப்படுகின்றன அதற்காகவே ஆதார் வாங்கப்படுகிறது. எனவே, ஆதார் இணைப்பு தொடர்பாக, யாரும் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் என்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com