அபிராமி ராமநாதன் இல்ல  திருமண வரவேற்பு நிகழ்ச்சி- பிரபலங்கள் வாழ்த்து

அபிராமி ராமநாதன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி- பிரபலங்கள் வாழ்த்து

அபிராமி மெகாமால் குழுமத்தின் தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசியல், திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அபிராமி ராமநாதன் மற்றும் நல்லம்மை ராமநாதன் தம்பதிகளின் மகள் வழி பேரனான அண்ணாமலை - அபிராமி திருமண வரவேற்பு சென்னை கிண்டி ஐ.டி.சி.கிராண்ட் சோழாவில் நேற்று விமரிசையாக நடைப்பெற்றது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னரும்,பாண்டிச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை செளந்தரராஜன் , மாண்புமிகு முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் பல அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மற்றும் நடிகர் சிவக்குமார், பிரபு, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கருணாஸ், பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும், திரைப்பட தயாரிப்பாளர்கள் என்.இராமசாமி முரளி, கதிரேசன், கலைப்புலி தாணு, R.B.செளத்ரி, சிவஸ்ரீ சினிவாசன், டி.சிவா,கே.ராஜன், பைனான்சியரும், தயாரிப்பாளருமான அன்புசெழியன், ரவி கொட்டக்காரா,விநியோகிஸ்தர் டி.ஏ.அருள்பதி,ரோகிணி தியேட்டர் ஆர்.பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்களும், தொழிலதிபர்களும், வர்த்த்தகபிரமுகர்களும், மணமக்களுக்கு நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவிர்க்க இயலாத  காரணங்களால் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com