மெரீனா பீச்சுக்குச் செல்லத் தடை!

மெரீனா பீச்சுக்குச் செல்லத் தடை!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை தர உள்ளார். சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையம் மற்றும் சென்னை - கோவை இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தர இருக்கிறார். பிரதமரின் இந்த தமிழகப் பயணத்தின் ஒரு நிகழ்வாக சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் ராமகிருஷ்ணா மடத்தின் ஆண்டு விழாவிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னை மெரீனா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பிவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் வாகனங்கள் அங்கிருந்து நடேசன் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக வாலாஜா சாலையை அடையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com