5 நிமிடத்தில் 100 பேரால் 100 வகையான உணவுகள் சமைத்து சாதனை

5 நிமிடத்தில் 100 பேரால் 100 வகையான உணவுகள் சமைத்து சாதனை

நோபல் உலக சாதனை நடுவர்கள் மத்தியில் அடுப்பில்லா முறையில் உணவு சமைத்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். 5 நிமிடங்கள் 13 வினாடிகளில் 100 பேர் தனித்தனியாக 100 விதமான இயற்கை உணவுகளை சமைத்து அசத்தினர்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தொழில் வா்த்தக சங்கக் கட்டடத்தில் இந்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரோக்கியமான இயற்கை உணவுகள், பாரம்பரிய உணவு பழக்க வழக்கம் போன்றவற்றை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.

நோபல் உலக சாதனை குழுவினர்கள் நடுவர்களாக இருந்து இந்நிகழ்வை நடத்தினர்.  சுமாா் 5 நிமிடம் 13 விநாடிகளில் 100 பேர் 100 வித்தியாசமான முறையில் இயற்கையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை அடுப்பு இல்லாமல் செய்து முடித்தனர். இதையடுத்து இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் விருதுநகா், மதுரை, தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞா்கள் பங்கேற்றனர்,  

ஆண்டுதோறும் உலக அளவில் நிகழ்த்தப்படும் பல்வேறு சாதனைகள் இந்தியா மற்றும் மொரிசியஸில் வெளியாகும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும். அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான சாதனையில் இந்த ஆரோக்கிய சமையல் இடம்பெறவுள்ளது.

நிகழ்ச்சியில் நோபல் உலக சாதனை நடுவர்கள் டாக்டர் அரவிந்த், ஹேமந்குமார், வினோத் குமார், பரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சான்றிதழ்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் சரண்யா செய்திருந்தார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com