தயாரிப்பாளர் வி ஏ துரைக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உதவி!

தயாரிப்பாளர் வி ஏ துரைக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உதவி!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர் வி ஏ துரைக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உதவுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் முடிந்ததும் நேரில் வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர் வி ஏ துரை குறித்து உதவி கேட்டு, அவரது நண்பர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இதனை தொடர்ந்து சில டிவி சானல்களையும் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. அதன் மூலம் தயாரிப்பாளர் வி ஏ துரைக்கு தயாரிப்பாளர் சங்கத்திலும் சில உதவிகள் செய்வதாக வாக்களித்தனர்.

2003-ம் ஆண்டு பாலா இயக்கத்தில், விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றி அடைந்தது. ஆரம்பத்தில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பாபா திரைப்படத்திலும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை.

தற்போது மனைவி, மகளை பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வரும் தயாரிப்பாளர் வி.ஏ.துரை சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவ செலவிற்கு கூட வழியில்லாமல் மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வரும் வி.ஏ.துரை இயக்குநர் எஸ் பி முத்துராமன் அவர்களின் உதவியால், சிகிச்சை பெற்று, ஓரளவிற்கு உடல்நலம் தேறி, எழுந்து உட்காரும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இருப்பினும் காலில் ஆறாத ரணத்துடன், புண்கள் ஆறாத நிலையில், உடல் மெலிந்து அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.

உதவி கேட்டு வெளியான வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து, நேற்று நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாயும் , கருணாஸ் 50 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டினர்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், நான் பார்த்துக்கொள்கிறேன் கவலைப்பட வேண்டாம் எனவும் நம்பிக்கை அளித்துள்ளதோடு, ஜெயிலர் படபிடிப்பு முடிந்த பிறகு நேரில் வந்து சந்திப்பதாவும் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com