ICUவில் நாஞ்சில் சம்பத்

ICUவில் நாஞ்சில் சம்பத்

ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், முக்கிய தூண்களில் ஒன்றாகவும் திகழ்ந்தவர் நாஞ்சில் சம்பத். அனல்கக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர். மதிமுகவின் பிரச்சார பீரங்கியாக வலம் வந்தவர். தற்போது அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்ட நாஞ்சில் சம்பத், திராவிட இயக்கப் பேச்சாளராக தமிழகம் முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குமரி மாவட்டம் தக்கலை அருகே மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத் (வயது 68). பேச்சாளரும் இலக்கியவாதியுமான இவருக்கு நேற்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் நாஞ்சில் சம்பத்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது நாஞ்சில் சம்பத் மயக்க நிலையில் காணப்பட்டார்.

இன்று காலை வரை அவருக்கு மயக்கம் தெளியவில்லை. டாக்டர்கள் அவரை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். நாஞ்சில் சம்பத்திற்கு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சற்று குறைவாக உள்ளதாகவும் சர்க்கரை நோயின் அளவு அதிகமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஆனால் இன்னும் மயக்க நிலை யிலேயே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேடைகளில் சரமாரியாக பலரையும் விமர்சிப்பார். யாருக்கும் பயப்படவே மாட்டார். அரசியல், இலக்கிய மேடைகளையும் தாண்டி சினிமாவிலும் நடிகராக இருப்பவர் நாஞ்சில் சம்பத்.

வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ம.தி.மு.க.கட்சியிலிருந்து விலகி 2012-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அங்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.

தினகரன் அமமுகவை ஆரம்பித்த நிலையில் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை எனக் கூறி கட்சியில் சேரவில்லை..

இறுதியில் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்ட நாஞ்சில் சம்பத், திமுக மேடைகளில் ஐக்கியமாகிவிட்டார்.. இப்போது திராவிட இயக்கப் பேச்சாளராக தமிழகம் முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.. இவரது பேச்சினால் பலமுறை பாஜகவினர் கொந்தளித்து, நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்ற நிகழ்வுகள் ஏராளம். அவ்வளவு ஏன், ஈரோட்டில் கடந்த மாதம்கூட ஒரு சம்பவம் நடந்தது. ஒரு டிவி சேனல் சார்பில் விவாத நிகழ்ச்சி நடந்தபோது, அதில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத், பாஜகவினரை பொறுக்கிகள் என்று பேசிவிட்டார்.

இதனால், அந்த அரங்கத்திலேயே மிகப்பெரிய கூச்சலும், ரகளையும் நடந்தது.. இத்தனைக்கும் அதே மேடையில், நாஞ்சில் சம்பத், பாஜகவின் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர். அந்த அளவுக்கு பரபரப்பை தன் பேச்சால் கிளப்பி வருபவர் நாஞ்சில் சம்பத். இவருக்கு தற்போது திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது..

நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். அவரது உறவினர்கள் அவரை நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நாஞ்சில் சம்பத்திற்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என்கிறார்கள்.

அதேசமயம், நாஞ்சில் சம்பத் உடலுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து இதுவரை மருத்துவமனையில் இருந்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com