தமிழக மாவட்டங்களை விமானம் மூலம் இணைக்கவிருக்கும் ஏர் சஃபா - குறு விமான சேவை!

தமிழக மாவட்டங்களை விமானம் மூலம் இணைக்கவிருக்கும் ஏர் சஃபா - குறு விமான சேவை!

புதுச்சேரி: சிங்கப்பூரைச் சேர்ந்த விமான குத்தகை நிறுவனமான ஏர் சஃபா, கோவை மற்றும் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று வெள்ளி அன்று  சோதனை ஓட்டத்தை நடத்தியது.

இந்த ஆண்டு தீபாவளிக்குள் சென்னை, திருப்பதி, வேலூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் தினசரி விமானங்களை இயக்க ஏர் சஃபா திட்டமிட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் விரைவில் விமானம் மூலம் இணைக்கப்படும் என்று தெரிகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த விமான குத்தகை நிறுவனமான ஏர் சஃபா, புதுச்சேரிக்கு கோவை மற்றும் பெங்களூருவில் இருந்து வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டத்தை நடத்தியது. "புதுச்சேரி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள இரண்டு தளங்களில் இருந்து 19 இருக்கைகள் கொண்ட எல்-410என்ஜி விமானங்களில் குறுகிய தூர விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்" என்று ஏர் சஃபா (இந்தியா) எம்.டி.கே. முருகப்பெருமாள் தெரிவித்தார்.

"நாங்கள் செக் குடியரசில் இருந்து ஐந்து விமானங்களை முன்பதிவு செய்துள்ளோம், அவை விரைவில் வரும். இதற்கிடையில், வழித்தடங்களில் இயக்க டிஜிசிஏ அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளோம். அனுமதி பெற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும். தீபாவளிக்குள் இதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன”என்று அவர் கூறினார், மே , ஜூன் மாதத்திற்குள் இதற்கான ஒப்புதல்கள் வரும்.

ஏர் சஃபாவைப் பொறுத்தவரை, வணிக விமானங்களை இயக்குவதற்கான அதன் முதல் முயற்சி இதுவாகும். "நாங்கள் பெரிய விமான ஆபரேட்டர்களுடன் போட்டியிடவில்லை, ஆனால் எங்களுடையது அவர்களின் இயக்கத்திற்கு துணையாக இருக்கும்" என்று முருகப்பெருமாள் கூறினார். அத்துடன் நபர் ஒருவருக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரையிலான கட்டணங்கள் பெரிய விமான ஆபரேட்டர்களுக்கு மிகவும் போட்டித்தன்மையுடன் இருக்கும்.

“பயணிகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் பாதைகள் தேர்வு செய்யப்படும். சில வழித்தடங்களில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படலாம். புதுச்சேரி-சென்னை வழித்தடத்தில், காலை மற்றும் மாலையில் இரண்டு விமானங்கள் இயக்க விரும்புகிறோம், மேலும் இரவு தரையிறங்குவதற்கு ஐஎஃப்ஆர் (இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் வசதி) நிறுவ இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்,” என்றார் முருகப்பெருமாள்.

"பெங்களூருவில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களின் சிறிய மற்றும் பெரிய நகரங்களில் இருந்தும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான சுற்றுலதாத் தலமாக புதுச்சேரி உருவாகி வருவதால், புதுச்சேரிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி இதன் தொடக்க விழாவில் கலந்துக்கொள்ள விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவருக்கு விமானம் இயங்கும் முறை மற்றும் அதன் வசதிகளைப் பற்றி  எம்.டி.முருகப் பெருமாள் விளக்கினார். “இப்போது ஹைதராபாத் மற்றும் பெங்களூருவுடன் இணைக்கப்பட்டுள்ள விமான நிலையத்திலிருந்து அதன் இணைப்பை மேம்படுத்த புதுச்சேரிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இது சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு ஊக்கமளிக்கும்,'' என்றார் முதல்வர் ரங்கசாமி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com