எங்கள் தலைமையில்தான் கூட்டணி!

எங்கள் தலைமையில்தான் கூட்டணி!

அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே முட்டல் மோதல் தொடர்ந்து கொண்டே இருப்பது ஒன்றும் தமிழகத்துக்கு புதிதல்ல...

அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று அதன் சீனியர் அமைச்சர்கள் சொல்லிவந்த நிலையில் பா.ஜ.க. அதை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

கோவை, நீலகிரி,நெல்லை, தென்சென்னை உள்ளிட்ட தொகுதிகளை பா.ஜ.க. எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. 2024ம் ஆண்டு தேர்தலை முன்வைத்து தேர்தல் பணிகளை செய்யத் தொடங்கி விட்டது பா.ஜ.க.

ஆனால் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயளாலர் எடப்பாடி, எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும். அப்படி இல்லையென்றால் தனியாகவே தேர்தலை சந்திக்கவும் தயங்க மாட்டோம் என்று சொல்லி வருகிறார்.

இந்நிலையில் பா.ஜ.க. வின் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவை தமிழகம் வரவழைத்து கோவை நீலகிரி தொகுதிகளில் 2024 தேர்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டது பா.ஜ.க.

பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசிய ஜே.பி. நட்டா, பா.ஜ.க.வின் செயல்திட்டங்கள் குறித்தும், நீலகிரிக்கு இன்னும் என்னென்ன நலத்திட்டங்கள் தொடங்க உள்ளது என்பதை குறித்தும் பேசினார். கூடவே தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

பா.ஜ.க.வின் தமிழக தலைவர் அண்ணாமலையும் கோவை, நீலகிரி தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதை மனதில் வைத்து, இதுவரை என்னென்ன செய்துள்ளோம், இனி என்னென்ன திட்டங்கள் கோவைக்கு வரப்போகிறது என்று பேசினார்.

நீலகிரியில் எல்.முருகன் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதை மனதில் வைத்து இத்தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது பா.ஜ.க.

அதேபோல் கோவையில் சிபி.ராதாகிருஷ்ணனும், கன்னியாகுமரியில் மூத்த பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டிஇட விரும்பு கிறார்களாம். ஆனால், அண்ணாமலை ஆதரவாளர்களோ எப்பவும் சிபிஆர், பொன்னார் என பழைய தலைவர்களுக்கே கொடுப்பதா? இந்த முறை இவர்களுக்கு பதில் புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாமே என்கின்றனராம்

அதேபோல் தென்சென்னை தொகுதிக்கும் பிரபல நடிகையை மையமாக வைத்து இப்போதே கட்சிக்குள் முட்டல் மோதல் தொடங்கிவிட்டதாம். தென்சென்னை அவருக்குதான் என கூறப்பட்டாலும் அது உறுதி செய்யப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

இப்படி அதிமுகவிடம் இருந்து தன்னிச்சையாக பாஜகவே தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு செயல்படுவது பல சீனியர் அ.தி.மு.க.வினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். பா.ஜ.க.வை கழற்றி விட்டு விடலாமா- என்று கூட எடப்பாடியிடம் சொல்வி வருகிறார்களாம் பல மூத்த கட்சி நிர்வாகிகள்.

பாஜகவின் இந்த ஆட்டம் எப்படி முடியப் போகிறது என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com