
தமிழகத்தில் இம்மாதம் 6-ம்தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
நாட்டில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி, சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் ஆர்.எஸ்.எஸ் யக்கம் பேரணி நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் விஜயதசமியன்று இந்த பேரணிக்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இம்மாதம் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க உத்தரவிட்டிருந்தது.
மேலும் நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால் காவல்துறை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அந்தந்த மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நவம்பர் 6-ம் தேதி நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.