நீலகிரியில் பூத்துக் குலுங்கும் அதிசய பிரம்ம கமலம் புஷ்பங்கள்!

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் அதிசய பிரம்ம கமலம் புஷ்பங்கள்!

நீலகிரியில் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே இரவில் பூக்கும் அபூர்வ வகை மலர் நிஷகாந்தி. கள்ளிச் செடி வகையைச் சேர்ந்த தாவரத்தில் பூக்கும் இந்த அரிய வகை மலரை பிரம்ம கமலம் என்றும் அழைப்பர். வெண்மை நிறம் கொண்ட இந்த மலர் மூன்று விதமான இதழ்களைக் கொண்டு பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்.

படைப்புக் கடவுளான பிரம்ம தேவனின் நாபிக்கொடி என வர்ணிக்கப்படும் இந்த பிரம்ம கமல புஷ்பங்கள் இளவேனில் காலத்தில் மட்டுமே பூத்துக் குலுங்கும். மேலும், நள்ளிரவில் பூக்கும் இந்த மலர்கள் அதிகாலைக்குள் உதிர்ந்து போவது இதன் தன்மையாகும். ஒரு செடியில் பத்துக்கும் மேற்பட்ட மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்த மலர்கள் இரவில் பூத்துக் குலுங்குவதால் அந்தப் பூவின் வாசம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தெய்வீக நறுமணத்தை வீசும்.

பிரம்மாவுக்கு மிக உகந்த புஷ்பமான இந்த பிரம்ம கமலத்தை பார்ப்பது மிகவும் அரிது. இந்த அரிய பூவின் நடுவில் பிரம்ம தேவர் படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் ஒன்று படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும். இந்த மலரின் சிறப்பு என்னவென்றால் , இந்தப் பூ பூக்கும்போது என்ன நினைத்து வேண்டினாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இந்த அரிய வகை மலர்கள், உத்தரகாண்ட், இமயமலை அடிவாரங்களில் மட்டுமே அதிகமாகப் பூத்துக் குலுங்கும். தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே இந்த பிரம்ம கமலம் புஷ்பத்தைக் காண முடியும். அந்த வகையில்  இந்த மலர் நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள கொளப்பள்ளி கிராமத்தில் ஒருவர் வீட்டின் தோட்டத்தில் பூத்துக் குலுங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com