செயற்கை நீரூற்று
செயற்கை நீரூற்று

காண்போரை கவர்ந்திழுக்கும் செயற்கை நீரூற்று! அண்ணா நகர் 'ரவுண்டானா'!

சென்னையை அழகுப்படுத்தும் விதமாக தற்போது பல்வேறு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மாநகராட்சியினர் அழகுப்படுத்தும் விதமாக புல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி சென்னை அண்ணா நகர் பகுதியில் மூன்றாவது அவென்யூவில், அண்ணாநகர் காவல் நிலையம் அருகில் உள்ள சாலையின் நடுவே உள்ள 'ரவுண்டானா' வில் சென்னை மாநகராட்சி சார்பில் அழகிய சிறிய பூங்கா ஒன்று மாநகராட்சியினரால் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

அதில், செயற்கை நீரூற்றுடன் மயில் சிலையும், அதைச் சுற்றி வண்ணமயமான பூச்செடிகளும் வைக்கபட்டுள்ளன. இது காண்போரை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறது. சென்னை தற்போது சிங்காரச் சென்னையாக மாறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதேபோன்று பல இடங்களிலும் செயற்கை நீரூற்று அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com