சூப்பர் ஸ்டாரை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்!

சூப்பர் ஸ்டாரை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்!

ந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன். 28 வயதான இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். விக்கெட் கீப்பராகவும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் திகழ்ந்து வரும் இவர், தமது சிறிய வயதிலிருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்று பல நேர்காணல்களில் அவரே தெரிவித்துள்ளார். இருபத்தியொரு ஆண்டுகளாக, ‘சூப்பர் ஸ்டாரை சந்திக்க முடியுமா’ என்று நினைத்திருந்த இவரது கனவு தற்போது நிறைவேறி உள்ளது. ஆம், சஞ்சு சாம்சனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்திருப்பது போல் உள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2023 ஐபிஎல் போட்டிகள் இம்மாதம் 31ம் தேதி தொடங்குகிறது. இதற்காக சஞ்சு சாம்சன் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். ஐபிஎல் போட்டி அணிகளின் ராஜஸ்தான் கேப்டனாகவும், அதிரடியாக பெரிய சிக்ஸர்களை அடிப்பதிலும் திறமை வாய்ந்தவருமான இவர், நடிகர் ரஜினியின் அழைப்பின் பேரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது வீட்டுக்குச் சென்று ரஜினியைச் சந்தித்துள்ளார்.

இது குறித்து சஞ்சு சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தனது ஏழு வயதில் இருந்தே நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன். அப்போதிலிருந்தே எனது பெற்றோர்களிடம் கூறி வந்தேன்… நிச்சயம் ஒரு நாள் நான் ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்திப்பேன் என. தலைவர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்ததன் மூலம் இருபத்தியொரு ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவாகி உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com