அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளுக்கு மறுதேதி அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவானதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரு தினங்கலூக்கு முன்பு மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. அதையடுத்து தமிழகத்தில் மழை குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் ஒத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கு இப்போது மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல டிசம்பர் 10-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் இப்போது டிசம்பர் 31-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com