மதுரை
மதுரை

மதுரை அரிட்டாபட்டி பல்லுயிர் மண்டலமாக அறிவிப்பு!

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை  பல்லுயிர் பாரம்பரிய மண்டலமாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அரிட்டாப்பட்டி கிராமத்தில் 7 சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதி அமைந்துள்ளது. இதில்  72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள், 3 தடுப்பணைகள் உள்ளது. மேலும் இப்பகுதி பல பறவைகள் மற்றும் அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளன.

மேலும் பல்வேறு சமண சிற்பங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் ஆகியவையும் உள்ளன.

இதனால் தமிழக அரசு அரிட்டாப்பட்டியை பல்லுயிர்ப் பாரம்பரிய தலமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com