மீண்டுமொரு மாணவர் பலி, தொடரும் ஐஐடி தற்கொலைகள்... 75 நாட்களில் இது 4 வது மரணம்!

மீண்டுமொரு மாணவர் பலி, தொடரும் ஐஐடி தற்கொலைகள்... 75 நாட்களில் இது 4 வது மரணம்!

சென்னை ஐஐடி யில் இரண்டாம் ஆண்டு பி டெக் பயிலும் மாணவர் வாழ்க்கையை முடித்துக்கொண்டார், 75 நாட்களில் இது நான்காவது மரணம்.

ஐஐடி 20 வயது இளங்கலை மாணவர், வளாகத்தில் உள்ள தனது விடுதி அறையில் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இறந்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேதார் சுரேஷ் என்பது அடையாளம் காணப்பட்டது, அவர் அந்த நிறுவனத்தில் இரசாயன பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு இளங்கலைப் பட்டதாரி ஆவார். அவர் வளாகத்தில் உள்ள விடுதி அறையில் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

"வெள்ளிக்கிழமை, சுரேஷின் அறை தோழர்கள் காலையில் வகுப்பிற்குச் சென்றனர், சுரேஷ் அறையிலேயே தங்கியிருந்தார். மதியம், அவரது நண்பர்கள் அவர் இல்லாததைக் கவனித்து ஹாஸ்டல் அறையை அடைந்தனர். அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர், பல முறை தட்டியும், எந்த ஒரு பதிலும் இல்லை." என ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.

மாணவர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, அங்கு கேதார் சுரேஷ் இறந்து கிடப்பதை கண்டனர். தொடர்ந்து மாணவர்களின் அவசர அழைப்பில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினரும் அவர் இறந்ததை உறுதிப்படுத்தினர் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் மாணவர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 31ஆம் தேதி, வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் டாக்டர் பட்டம் பெற்ற 31 வயது மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 14 அன்று, ஐஐடி-மெட்ராஸ்-ல் 20 வயது பி.டெக் மாணவர், வளாகத்தில் உள்ள தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர் ஆந்திராவை சேர்ந்த வி வைப்பு புஷ்பக் ஸ்ரீ சாய் என அடையாளம் காணப்பட்டார்.

பிப்ரவரி 14 அன்று, MS பயின்று வந்த ரிஸர்ச் ஸ்காலரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார், மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஐஐடி மாணவர்களிடையே ஒரு தொடர் நிகழ்வாக நேர்ந்து வரும் இந்த தற்கொலை நடவடிக்கைகளை காப்ப் கேட் பிஹேவியர் அதாவது நகல் நடத்தை என அடையாளப்படுத்துகிறது நிர்வாகம். உண்மையில் இது தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரித்து அறிய வேண்டிய பிரச்சினையாகும், இது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும்.

தற்கொலைகளைத் தடுக்க, இது ஏன் நடந்தது என்பதைப் பகுப்பாய்வு செய்து, தற்கொலை அல்லது மனச்சோர்வு உள்ளவர்களுக்கு அதைச் சமாளிக்க வேறு வழிகள் உள்ளன என்று சொல்ல வேண்டும். தற்கொலை செய்துகொள்ளும் நபர்களைக் கண்டறிந்து, அந்தச் சிக்கலை ஒப்புக்கொண்டு, தற்கொலைகளைத் தடுக்கலாம்,” என்கிறார் SNEHA நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜய்குமார்.

(தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கான உதவி தமிழ்நாடு சுகாதார உதவி எண் 104 மற்றும் சினேகாவின் தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றில் கிடைக்கும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com