மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு
மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு

"பிரச்சார வேனில்" மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு!

ஒவ்வொரு ஆண்டும் கலால் மற்றும் மதுவிலக்கு துறையினரால் அரசின் பல துறைகளுடன் இணைந்து மதுபோதைக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரசார வாகனத்தை சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி நேற்று துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும், கலால் மற்றும் மதுவிலக்கு துறையினரால் அரசின் பல துறைகளுடன் இணைந்து, மதுபோதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்த வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரசார வாகனத்தை, சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

தொடர்ந்து, மக்கள் அதிகமுள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், பாரிமுனை பஸ் நிலையம், மெரினா உள்ளிட்ட இடங்களில் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனால் பொது மக்களிடையே மது மற்றும் போதை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com