மருத்துவப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

medical seat
medical seat

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அதையடுத்து எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு நாளை  செப்டம்பர் 22-ம் முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

-இதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது;

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு www.tnhealth.tn.gov.in tnmedicalselection.net ஆகிய இணையதளங்கள் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என்று, ஒட்டுமொத்தமாக 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5175 இடங்களும்,

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். 3050 இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்களும், அரசு ஒதுக்கீட்டில் 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1960 இடங்களும் என மொத்தம் 10,385 இடங்கள் உள்ளன.

இவற்றில் ஒட்டுமொத்த எம்பிபிஎஸ் இடங்கள் எண்ணிக்கை 8225. பி.டி.எஸ். படிப்புக்கான இடங்கள் எண்ணிக்கை 2160. மருத்துவ படிப்பு சேர்க்கையில், அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் கலந்தாய்வு துவங்கும்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com