‘காவேரி மருத்துவமனையை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க‘ அண்ணாமலையை கலாய்த்த அமைச்சர் நேரு!

‘காவேரி மருத்துவமனையை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க‘ அண்ணாமலையை கலாய்த்த அமைச்சர் நேரு!

மிழ்நாட்டின் முக்கியமான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது காவேரி மருத்துவமனை. சென்னை மக்களில் ஒருசிலருக்கு மட்டுமே பரிச்சயமாகி இருந்த இந்த மருத்துவமனை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது கடைசி காலத்தில் சிகிச்சை பெற்று வந்ததால், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த மருத்தவமனை மிகவும் பிரபலமாகி விட்டது.

கலைஞர் கருணாநிதியின் இறுதி நாட்கள் காவேரி மருத்துவமனையில் கழிந்ததால் நொடிக்கு நொடி ஊடகங்களில் பேசுபொருளாகவும், தலைப்புச் செய்தியாகவும் காவேரி மருத்துவமனை விளங்கியது. தற்போது இந்த மருத்துவமனை திருச்சி, காரைக்குடி என பல்வேறு இடங்களில் தனது கிளையைப் பரப்பி உள்ளது. இதனிடையே தற்போது, ‘இந்த மருத்துவமனை அமைச்சர் நேருவுக்குச் சொந்தமானது’ என யூகங்களின் அடிப்படையில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தன. அதனை மெய்ப்பிப்பது போல சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், ‘காவேரி மருத்துவமனை அமைச்சர் நேருவுக்கு சொந்தமானது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது தொடர்பாகப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “அட ஏங்க… நீங்க வேற, காவேரி மருத்துவமனையை ஏழு பேர் கூட்டாக சேர்ந்து நடத்தி வரும் நிலையில், அந்த மருத்துவமனை என்னுடையது என அண்ணாமலை கூறினால் அதற்கு என்ன அர்த்தம்? அண்ணாமலையிடம் சொல்லி, அந்தக் காவேரி மருத்துவமனையை மட்டும் எனக்கு வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க” என்று கலாய்த்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், ‘தன்னுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தேர்தலில் போட்டியிடும்போதே கொடுத்திருப்பதாகவும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு போடுவார்கள்‘ எனவும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். ‘திமுக பைல்ஸ்’ என்ற பெயரில் முக்கிய அமைச்சர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டிருக்கும் நிலையில், அமைச்சர் நேரு இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com