குரங்குகளை விட்டு கடிக்க வைத்த கொடூரம்: ஆதரவற்றோர் ஆசிரமத்தில் நடந்த கொடுமை!

குரங்குகளை விட்டு கடிக்க வைத்த கொடூரம்: ஆதரவற்றோர் ஆசிரமத்தில் நடந்த கொடுமை!

விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூரில் உள்ளது அன்பு ஜோதி ஆசிரமம். இந்த ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என 150க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அரசு அனுமதியின்றி நடைபெற்று வந்த இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த சிலர் சமீப காலங்களில் காணாமல் போய்விட்டதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார், வருவாய் துறை, சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வருவதாகவும் ஆதரவற்ற பெண்கள் மீது அந்த வளர்ப்பு குரங்குகளை ஏவி விட்டு கடிக்க வைத்தும், போதை பொருளைத் தந்து அவர்களை பலாத்காரம் செய்து வந்ததும் இந்த சோதனையில் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இங்கு தங்கியுள்ளவர்கள் பெரும்பாலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், குரங்குகளை ஏவிவிட்டு கடிக்க வைத்துள்ளார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதனால், குரங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆசிரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் உள்ளிட்ட 6 பேர் மீது அனுமதியின்றி ஆஸ்ரமம் நடத்தி வந்தது, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்தவர்களை வியாபார உள்நோக்கத்துடன் வெளி மாநிலத்துக்கு கடத்தியது, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோரை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தது உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்ரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின் உள்ளிட்ட 2 பேரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, அன்பு ஜோதி ஆசிரமம் விக்கிரவாண்டி வருவாய் துறை அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com