நீர் நிலைகளின் அபாயம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்.

நீர் நிலைகளின் அபாயம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்.

மீபமாக குளம், குட்டைகள், ஆறுகளில் சிறுவர் சிறுமிகள் முதல் இளைஞர்கள் வரை தெரியாமல் மூழ்கி உயிரிழக்கும் பரிதாபங்கள் நிறைய நடைபெற்று வருகிறது. எவ்வளவுதான் எச்சரிக்கை தந்தாலும் சிறுவயதின் வேகம் அவர்களை விபரீதம் அறியாமல் நீர் நிலைகளில் விளையாட வைத்து ஆபத்தைத்தருகிறது. தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பிள்ளைகளுக்கு பொழுதுபோக்குகள் அதிகம் தேவைப்படும். அது மட்டுமின்றி கோடையின் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளை நாடிச்செல்வார்கள். இவர்களை எச்சரிக்க சேலத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம்  செய்து வருகின்றனர் அரசு ஊழியர்கள்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் பொழுது போக்குவதற்காக நீர்நிலைகளில் குளித்து மகிழ்வது வழக்கம். அப்படி குளிக்கும்போது நீச்சல் தெரியாமலும் ஆழமான பகுதிக்கு சென்றும் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும்  சம்பவங்கள் கோடை விடுமுறையில்போது நடைபெற வாய்ப்புகள் அதிகம்.

     இதற்கிடையில் சேலம் மாவட்டத்தில் கடந்த ஒன்னேகால் ஆண்டுகளில் 156 பேர் நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழந்த உள்ளனர். இதனால் கோடை விடுமுறையை மாணவ மாணவிகள் மகிழ்ச்சிகரமாக கொண்டாட வேண்டும் எனவும் நீர்நிலைகள் அருகில்  செல்லக்கூடாது எனவும் அப்படியே நீர் நிலைகளில் குளித்தால் பெற்றோர்கள் கண்காணிப்பில்தான் குளிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

     இதன் தொடர்ச்சியாக காவிரிக் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் செய்ய மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மேட்டூர் காவிரி ஆற்றங்கரைகளில் வருவாய் ஆய்வாளர் லீலா கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசர் ஆகியோர் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதேபோல் தாரமங்கலம் பகுதியில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டி கிராமம் கிராமமாக சென்று மாணவ மாணவிகள் நீர் நிலைகளில் அருகே செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

     சேலத்தாம்பட்டி கிராம பகுதியிலும் வாகனங்களில் ஒலிபெருக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். தேவூர் அருகே கோனேரிபட்டி, கைவடங்கம், காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், வேலாத்தா கோவில் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் சங்ககிரி தாசில்தார் அறிவுரைநம்பி, தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கோடை விடுமுறையில் நீர்நிலைகளின்  அருகில் மாணவ மாணவிகளை குளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கூறிய அறிவுரையையும் விளக்கி கூறினர். பல்வேறு இடங்களில் மாணவ மாணவிகளுக்கான வெளிப்புறம் விழிப்புணர்வு வாசகங்கள்  அடங்கிய பிளக்ஸ் பேனர்களும் கட்டப்பட்டு இருந்தது குறிப்படத்தக்கது.

என்னதான் அரசும் அதிகாரிகளும் பிரச்சாரங்கள் செய்தாலும் பிள்ளைகளின் பாதுகாப்பு அவரவர் பெற்றோரின் கைகளிலும் இருக்கிறது என்பதைப் புரிந்து பிள்ளைகளின் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com