
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டுதல்களை உயர் கல்வித் துறை வெளியிட்டது.
-இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டதாவது:
தமிழகத்தின் அனைத்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் அமல்படுத்தப் பட வேன்டும்.
மேலும் இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். B.Ed., சேர விரும்பும் மாணவர்களில் பட்டியலினத்தவர்கள் 40%, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43%, பிற்படுத்தப்பட்டோர் 45% மதிப்பெண்களையும் ,பொதுப் பிரிவினர் 50% மதிப்பெண்களையும் இளங்கலை பட்டப் படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும்.
இளங்கலைப் பட்டப் படிப்புக்கு இணையான படிப்புகள் (Equivalent Degree) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் முடித்தவர்களும் B.Ed. படிப்பில் சேர தகுதிபெற்றவர்கள் ஆவர். அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர https://www.tngasaedu.in இணையதளத்தை அணுகலாம்.
மேலும் தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம்.
-இவ்வாறு வழிகாட்டுதல்களை தமிழக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.