B.E படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்...!

B.E படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்...!

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 26ஆம் தேதி வெளியிடப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. சிறப்புப் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7 புள்ளி 5 சதவீத ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க விளையாட்டுப் பிரிவில் 226 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் 9 பேரும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 26 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய மூன்று பிரிவிலும் சேர்த்து 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டு சிறப்பு பிரிவில் மொத்தம் 628 இடங்கள் உள்ளன.இதற்கு இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளதால், மாணவர்கள் வீடுகளில் இருந்தும், அரசு அமைத்துள்ள மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com