சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பீர் பஸ்; குடிவான்களுக்கு குஷி திட்டம்!

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பீர் பஸ்; குடிவான்களுக்கு குஷி திட்டம்!

வார நாட்கள் முழுவதும் கடினமாக உழைக்கும் பலரும் வார இறுதியில் ஒரு நாள் பாண்டிச்சேரிக்கு சென்று சந்தோஷமாக இருந்து விட்டு வர வேண்டும் என்று நினைப்பது தற்போது பலரிடமும் சர்வ சாதாரணமாகி விட்டது. பாண்டிச்சேரிக்கு செல்வது என்றாலே பெரும்பாலான இளைஞர்களின் நினைவுக்கு வருவது மது விருந்துதான். அவர்களை குறிவைத்து புதுச்சேரியைச் சேர்ந்த ’கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி' என்ற நிறுவனம் சென்னையில் இருந்து புதுச்சேரி செல்ல, 'பீர் பஸ்' என்ற புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.

இந்த பீர் பஸ் சேவை, வரும், 22ம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு நாள் சென்று சுற்றிப் பார்ப்பதற்கு, நபர் ஒன்றுக்கு 3,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பீர் பஸ்ஸில் பலவிதமான உணவு வகையை சாப்பிட்டபடியே புதுச்சேரியின் அழகை சுற்றிப் பார்த்து ரசிக்கலாம். அதேநேரம் பீர் பஸ் என்பதால் யாரும் பஸ்ஸில் மது அருந்தலாம் என்று நினைக்க வேண்டாம். அதற்கும் கட்டுப்பாடு இருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவன ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, 'பீர் பஸ்' என அழைப்பதால், பஸ்சில் மதுபானங்களைக் குடிக்கலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். பஸ்சில் பீர் குடிக்க அனுமதிக்க மாட்டோம். ஆனால், புதுச்சேரி அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பஸ் நிறுத்தப்படும். அங்குள்ள இடத்தில் பீர் குடிக்க அனுமதிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

இந்தத் திட்டத்தின்படி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு 35 முதல் 40 சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு, அன்றைய தினமே மீண்டும் அவர்கள் சென்னை திரும்பலாம். இதற்கான முன்பதிவு தற்போது துவங்கி விட்டதாகவும் அந்த நிறுவன ஏற்பாட்டாளார்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com