தெப்பக்காடு யானைகள் முகாமின் முதல் யானை பராமரிப்பாளராக பெள்ளி நியமனம்!

தெப்பக்காடு யானைகள் முகாமின் முதல் யானை பராமரிப்பாளராக பெள்ளி நியமனம்!

சியாவிலேயே மிகவும் பழைமையான யானைகள் முகாம்களில் ஒன்றாகத் திகழ்கிறது நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் சரணாலயம். இங்குள்ள முகாம்களில் உள்ள யானைகளை இப்பகுதி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். இங்குள்ள யானைகள் முகாமில் வசிக்கும் ரகு மற்றும் பொம்மி ஆகிய இரு குட்டி யானைகளை பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வருகின்றனர். இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாகன்கள் மற்றும் காவடிகளின் (யானை பராமரிப்பாளர்) பணிகளைப் பாராட்டும் விதமாக, தமிழ்நாடு அரசு முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 91 பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு தலா 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளதோடு, சூழலுக்கியைந்த சமூக இணக்கமான வீடுகள் 9.10 கோடி ரூபாய் செலவில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க 8 கோடி ரூபாயும், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோழிகமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்த 5 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதலமைச்சரின் நீலகிரி  மாவட்ட வருகையின்போது தெப்பக்காடு யானைகள் முகாம் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தற்காலிக யானை பராமரிப்பாளராகப் பணியாற்றிவரும் பெள்ளி, அனாதையான யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையை கருத்தில்கொண்டு, தெப்பக்காடு யானைகள் முகாமின் காவடியாக (யானைகள் பராமரிப்பாளர்) நியமிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணி நியமன ஆணையினை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பெள்ளிக்கு வழங்கி உள்ளார். இச்சூழலில் வரும் 5ம் தேதி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com