தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகத்தில்  பிரெய்லி பலகைகள்!

Published on

சென்னையில் அமைந்துள்ள தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திப்பதற்காக பல ஊர்களில் இருந்து  நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும்  , பார்வையற்றோரும் உண்டு. அவர்கள் வந்து செல்வதில் சிரமம் இருந்தது

இப்போது பார்வையற்றோரும் சுலபமாக அதிகாரிகளின் அறைகளுக்கு செல்லும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பிரெய்லி எழுத்துக்கள் கொண்ட புதிய வண்ணப் பலகைகளும், பிரெய்லி நடைபாதைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் அதிகாரிகள் அறை மட்டும் அல்லாது கழிவறை படிக்கட்டுகள் சாய்தள படிக்கட்டுகள் உள்ளிட்ட இடங்களிலும் இந்தப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்களும் எளிதில் கண்டுபிடிக்க ஏதுவாக அமைச்சர்களின்அறையின் வெளியே நீல நிறப் பலகையும், அவசர வழிக்கான பாதையில் பச்சை வண்ண பலகையும், தீயணைப்பு கருவிகள் உள்ள இடங்களில் சிவப்பு நிற பலகையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து வண்ண பலகையிலும் பிரெய்லி எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com