நாற்காலி எடுத்துட்டு வா போடா... ஆவேசமாக கல்லை எறிந்த அமைச்சர் நாசர்!

நாற்காலி எடுத்துட்டு வா போடா... ஆவேசமாக கல்லை எறிந்த அமைச்சர் நாசர்!

ஸ்டாலின் தூக்கத்தில் கல் எறிந்த நாசர்:

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் சா.மு.நாசர்.

திருவள்ளுரில் நாளை (ஜன.25) மாலை மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மற்றும் பல்வேறு அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக திருவள்ளூர் ஐசிஎம்ஆர் அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் நாசர் இன்று காலை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

மேடை அமைக்கும் பணியை பார்வையிட்ட பின் சற்றே ஓய்வெடுக்க வந்தார். அங்கே அமர்வதற்கு நாற்காலி இல்லை. நாற்காலி எடுத்துவரும்படி திமுக தொண்டர் ஒருவரை அனுப்பினார். நீண்ட நேரம் ஆகியும் நாற்காலி எடுத்து வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த அமைச்சர் ஆவடி நாசர், நாற்காலி எடுத்து வரச் சென்றவர்கள் மீது கல்லை எடுத்து எறிந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விமர்சனத்துக்குள்ளானது.

இந்த மாதிரி சம்பவங்கள் திமுகவில் நடப்பது புதிதல்ல. இதற்கு முன் அமைச்சர் பொன்முடி “ஓஸி பஸ்” என்று சொல்லி வம்பை இழுத்துவிட்டார். இன்னொரு அமைச்சர் ஜாதி பெயரை சொல்லி அரசு அதிகாரியை திட்டினார். பின்னர் அந்த அமைச்சர் இலாகா பிடுங்கப்பட்டு வேறொரு இலாகாவிற்கு மாற்றப்பட்டார்.

திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சர்ச்சைப் பேச்சுக்கள், முகம் சுளிக்கவைக்கும் சில சம்பவங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே பொதுக்குழுவில் தம்முடைய வேதனையை வருத்தத்துடன் பேசினார்

திமுக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளிடம் தனது நிலையை மிக வெளிப்படையாக எடுத்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். “ ஒரு பக்கம் தி.மு.கவின் தலைவர். மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என்னுடைய நிலைமை.

இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல தி.மு.க. நிர்வாகிகளோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் சொல்வது?

நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி விடக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண்விழிக்கிறேன். சில நேரங்களில் என்னை இது தூங்கவிடாமல்கூட ஆக்கிவிடுகிறது” என்று வருத்தத்துடன் பேசினார்.

திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சர்ச்சைப் பேச்சுக்கள், முகம் சுளிக்கவைக்கும் சில சம்பவங்கள் தான் முதல்வர் ஸ்டாலினை அவ்வாறு பேச வைத்தது. ஆனாலும் இந்த சர்ச்சைப் பேச்சுக்களும், மேற்படி சம்பவங்களும் குறைந்தபாடில்லை.

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டர் ஒருவரை கல்லைக் கொண்டு எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நாசர் கல்லை எடுத்து எறியும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com