வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களை ஏமாற்றியதற்காக புரோக்கர் கைது!

வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களை ஏமாற்றியதற்காக புரோக்கர் கைது!

வீட்டு உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சேலையூர் போலீஸார் வீட்டு புரோக்கரை கைது செய்து நீதிமன்றக் காவலில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனர்.

சென்னை: வீட்டு உரிமையாளர்களிடம் ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, வீட்டு புரோக்கரை சேலையூர் போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனர்.

வீட்டு புரோக்கர் தங்கராஜ் வீட்டின் உரிமையாளர்களிடம் இருந்து வீடு குறித்த விவரங்களைப் பெற்று அதை ஆன்லைனில் வெளியிடுவார் என போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் குத்தகைதாரர்களுக்கு வீட்டை குத்தகைக்கு விடுவார், ஆனால் வீட்டின் உரிமையாளர்களிடம் குத்தகைத் தொகையை செலுத்துவதற்கு பதிலாக, அந்த வீட்டை வாடகைக்கு விட்டதாக அவர்களிடம் கூறி, ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு வாடகையை மட்டும் செலுத்துவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன், வீட்டு புரோக்கர் தங்கராஜ் என்பவர், 4 முதல், 5 லட்சம் ரூபாய்க்கு, வீடு ஒன்றை குத்தகைக்கு விட்டுள்ளார். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளரிடமோ வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். சொன்ன வாக்குப்படி வீட்டு உரிமையாளருக்குத் தொடர்ந்து சில மாதங்கள் முறையாக மாத வாடகை கொடுத்தார். சில மாதங்களுக்குப் பிறகு, படிப்படியாக அவர் வாடகை செலுத்துவதை நிறுத்தினார். அத்துடன் வீட்டின் குத்தகைக் காலம் முடிந்த பிறகு, அவர் குத்தகைத் தொகையையும் திருப்பித் தரத் தவறிவிட்டார்.

வீட்டு உரிமையாளர் மற்றும் வீட்டைக் குத்தகைக்கு அணுகி தங்கராஜிடம் ஏமாந்த குடும்பத்தினர் என இரு தரப்பினர் தந்த புகாரின் பேரில் போலீசார் தற்போது தங்கராஜை கைது செய்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com